Header Ads

இன்று நாடு திரும்பும் சந்திரிகா; தேர்தல் களத்தில் ஏற்படப் போகும் மாற்றங்கள்




பிரித்தானியாவிலுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் திரைமறைவு அரசியல் காய்நகர்த்தல் மூலம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய பிரபலங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து சந்திரிக்கா இன்று நாடு திருப்பவுள்ளார். அதன் பின்னர் இந்த கட்சி தாவல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கலந்து கொள்ளும் மக்கள் பேரணியில் இவர்கள் அனைவரும் இணையவுள்ளதாக கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் எதிர்வரும் நாட்களில் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷக்கு ஆதரவு வழங்கியுள்ள சுதந்திர கட்சியை காப்பாற்றும் நோக்கில் சந்திரிக்கா குமாரதுங்கவின் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.