கல்முனை நோக்கி சென்ற பஸ் பாரிய விபத்து; மீராவோடையை சேர்ந்த சாரதி உயிரிழப்பு
மின்னேரியாவில் நேற்றிரவு 11 மணியலவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை
போக்குவரத்து சபை கல்முனை சாலையின் பஸ் வண்டி கொழும்பிலிருந்து கல்முனை
நோக்கியும் தனியார் பஸ் ஒன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கியும்
பயணிக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு பஸ் வண்டிகளும் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் போது நேருக்குநேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில்
இ.போ.சபை கல்முனை சாலையின் பஸ் சாரதி ஓட்டமாவடி - மீராவோடையைச் சேர்ந்த
எச்.எல்.சமீம் என்பவர் மரணமடைந்துள்ளதோடு இரு பஸ்களிலும் பயணித்த
நாற்பதுக்கும் மேற்பட்டோர்கள் காயங்களுடன் மின்னேரியா மற்றும் பொலான்நறுவை
ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment