சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ள வசந்த
தான் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் இருந்து விலகி இருக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர்ி வசந்த சேனாநாயக்க கூறியுள்ளார்.
முன்னதாக வசந்த சேனாநாயக்க சஜித் பிரேமதாசவுக்கு காரசாரமான கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவாரா? ரவி – ரிஷார்ட் அமைச்சர்களாக மீண்டும் நியமிக்கப்படுவார்களா? அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது விமர்சனங்கள் உள்ள நிலையில் இந்த தேர்தல் பிரசாரத்தில் அவரின் வகிபாகம் என்ன ? என்ற விடயங்களள் அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடியாது போனால் உங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் நான் ஈடுபட மாட்டேன் என்று அவர் தனது கடிதத்தில் கூறி இருந்தார்.
இந்நிலையில் தனக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் தான அரசியலில் இருந்தே ஓய்வு பெறப் போவதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Post a Comment