கடந்த மஹிந்தவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ள கோட்டாபய
கடந்த மஹிந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளார்.
2005 - 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட அரசாங்க வேலைவாய்ப்புகள் அடிப்படை அற்றவை, அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என கோத்தாபய சாடியுள்ளார்.
கொழும்பில் தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கோத்தபாய இந்தத் தகவலை வெளியிட்டார்.
“நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது ஒரு நாள் எனது அமைச்சில் 800 பட்டதாரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக எனக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
800 பட்டதாரிகளை எனது அமைச்சில் வைத்துக் கொண்டு என்ன செய்வது? இவ்வாறு தொழில் வழங்குவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவை பொருளாதாரத்திற்கு பலனற்றது. சமூகத்திற்கும் பலனற்றது என கோத்தாபய தெரிவித்துள்ளார்.
மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மஹிந்தவின் கடந்த கால ஆட்சியை கோத்தாபய விமர்சிப்பது குறித்து, பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் கடும் அதிருப்பதி வெளியிட்டுள்ளனர்.

Post a Comment