கோட்டாவை சந்தித்த மைத்திரியின் விஷேட பிரதிநிதிகள்; விரைவில் கூட்டணி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் நேற்றிரவு ஸ்ரீ லங்கா
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் நீண்ட
சந்திப்பொன்றை நடத்தினர்.
சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் மஹிந்த அமரவீர,பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவண்ண ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரியின் விசேட தகவல் ஒன்றை அவர்கள் கோட்டாபயவிடம் முன்வைத்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணி ஒப்பந்தத்திற்கான நகல் ஒன்றும் இதன்போது கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய சந்திப்பையடுத்து கருத்து வெளியிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவர் ,இன்னும் சில தினங்களில் இருதரப்பு கூட்டணி ஒப்பந்தத்திற்கான இறுதிவரைபு பூர்த்தி செய்யப்படுமென்று குறிப்பிட்டார்

Post a Comment