Header Ads

முஸ்லிம் பாடசாலைகள் தவிர அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை


நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த  அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் தீபாவளிப் பண்டிகையினை கொண்டாடும் இந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் கருத்திற்கொண்டே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த தினத்துக்குப் பதிலாக வேறு ஒரு தினத்தில் விடுமுறை வழங்கப்பட்ட  நாளுக்குரிய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைள் இடம்பெறும் எனவும் அச்சுற்று நிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Powered by Blogger.