Header Ads

கோட்டாபய ராஜபக்ஷவை கொல்ல வேண்டும் என்று பௌசி கூறினாரா? புதிய சர்ச்சை



கோட்டாபயவை தோற்கடிக்க வேண்டும் என்ற தனது உரையை திரிபுபடுத்தி, மக்களைத் தவறாக வழிநடத்தும் விதமாக ‘கோட்டாபயவை கொல்ல வேண்டும்’ என்று கூறியதாக செய்தி வெளியிட்ட சிங்கள தொலைக்காட்சி ஊடகத்தின் மீது சட்டநடவடிக்கை எடுக்கவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.


வடகொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொட்டலங்க பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று (24) வியாழக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றிய ஏ.எச்.எம்.பௌஸி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:


நான் அரசியல் பயணத்தை ஆரம்பித்து 59 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இதுவரைகால அரசியல் வாழ்வில் நான் யார்மீதும் மோசமான அவதூறுகளைக் கூறியதில்லை. 
 
அதேபோன்று தேவையற்ற சேறுபூசும் கருத்துக்களை முன்வைத்ததும் இல்லை. கோட்டாதாய ராஜபக்க்ஷ எனக்கு மிகவும் நெருக்கமானவர். 

அவருடைய குடும்பத்துடனும் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன் என்றும்  அவர் தெரிவித்தார்.

Powered by Blogger.