Header Ads

தேர்தலில் போட்டியிடும் மைத்திரியின் மகள் சத்துரிகா சிறிசேனவுக்கு முக்கிய பதவி?

 Related image


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன அடுத்த பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என அரசியல் தரப்புகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், சத்துரிக்கா செயற்பாட்டு அரசியலில் இறங்குவார் என்றும், சுதந்திரக்கட்சியில் மகளிர் பிரிவில் அவருக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என்றும் தெரியவருகின்றது.

ஜனாதிபதி பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேன ஓய்வுபெற்றதும், அடுத்த பொதுத்தேர்தலிலும் அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாகவே நியமனம் வழங்கப்படவுள்ளது. இதற்கு பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.

மகளுக்கு வாய்ப்பளிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடாமல், தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கு மைத்திரி முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Powered by Blogger.