Header Ads

பூஜித் மற்றும் ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்


கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிணை உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குறித்த இருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.