ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் தொடர்பில் இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் தருணம்
தமிழ்நாடு, திருச்சி - நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள்
விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணியில் இறுதிக்கட்ட முடிவை எடுக்கும்
தருணத்தில் நாம் இருக்கின்றோம் என தமிழக சுகாதரத்துறை அமைச்சர்
சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
குழந்தை விழுந்து 4 நாட்களாகிவிட்ட நிலையில் மருத்துவர்களிடமும் ஆலோசனை
செய்யவுள்ளோம். மீட்புப் பணியில் அனைத்து நிலைகளையும் ஆலோசித்து
இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் சூழலில் இருக்கிறோம் என அவர் கூறியள்ளார்.
குழந்தையின் பெற்றோரிடமும் பேசியிருக்கிறோம். நிலைமையை
எடுத்துரைத்திருக்கிறோம். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதில்
நிபுணத்துவம் பெற்றவர்களை அழைத்திருக்கிறோம்.
பேரிடர் மீட்புக் குழுவினர்,
நிபுணர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையுடன் அடுத்தகட்ட நடவடிக்கையை
மேற்கொள்ளவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மீட்ப பணிகளின் போது மண்
சரிந்து விழுவதால், போர்வெல் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதுடன்,
ரிக் மிஷின் மூலமே மீண்டும் துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
சுஜித் மேல் உள்ள மணலை உறிஞ்சி எடுக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
கடந்த 25ம் திகதி மாலை 5.40 மணிக்கு தவறி விழுந்தான் 2 வயது குழந்தை
சுர்ஜித்தை. குழந்தை விழுந்ததுமே அவனை மீட்கும் பணிகள் ஆரம்பமாகின. ஆனால்
பல்வேறு கட்ட மீட்பு நடவடிக்கைகள் அனைத்துமே தோல்வியில் முடிந்தன.
இதையடுத்து, ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும்
முயற்சிகள் ஆரம்பமாகின. கிணற்றுக்கு பக்கத்திலேயே ஒரு ஆள் இறங்குமளவுக்கு
ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது.
ஆனால் அதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. முதல் ரிக் இயந்திரம் வைத்து
35 அடி மட்டுமே குழி தோண்டப்பட்டது. ஆனால், அந்த இயந்திரம் ரிப்பேர்
ஆகிவிட்டது. அதனால் 2வது இயந்திரம் கொண்டுவரப்பட்டு, சுஜித் விழுந்த
ஆழ்துளை அருகே 3மீ தூரத்தில் 2வது குழி தோண்டப்பட்டு வருகிறது.
குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற கவனத்தில் மீட்புப்பணி நடந்து வருகின்றது
இதனிடையே 100 அடிக்கும் கீழே குழந்தை சென்றுவிடக்கூடாது என்பதற்காக
அவனது கை இறுக பிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையை பார்த்துவிட மாட்டோமா என்ற
பொதுமக்களின் கவலை அதிகரித்து காணப்படுகிறது. அவன் நல்லபடியாக வந்துவிட
வேண்டும் என்று மக்களின் பிரார்த்தனையும் வலுத்து வருகிறது.

Post a Comment