மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க கடும் முயற்சி
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்து வரும் நாட்களில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் கோத்தபாய ராஜபக்ஷ தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில் மஹிந்தவை பிரதமராக்கும் திட்டத்திற்கான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய அரசாங்கத்துடன் இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் சில நிபந்தனைகளுடன் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு முடியாமல் உள்ளமையினால் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு சொற்ப அளவிலான உறுப்பினர்களின் ஆதரவே தேவை. இதனால் பாரிய அளவிலான நிபந்தணைகளுக்கு எந்த அவசியமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
எனினும் புதிய அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பான நாடாளுமன்ற யோசனைகளை சமர்ப்பித்த பின்னர் விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment