Header Ads

நண்பனின் மகளை கர்ப்பமாக்கிய வயோதிபர் பொலிஸில் சிக்கினார்

நண்பனின் மகளான 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் நாகலிங்கம் யோகராசா வயது (62) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டிற்கு அயல் வீட்டு தனது நண்பனின் மகளான 14 வயது சிறுமிக்கு இனிப்பு வகைகளை வாங்கி கொடுத்து சிறுமியை தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

இன்று சிறுமி தலை சுற்றி வாந்தி எடுத்தபோது, சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வைத்திய பரிசோதனையின் போது, சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் சிறுமியிடம் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையின் போது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார்.

சிறுமியின் வாக்கு மூலத்தின் பிரகாரம் துஸ்பிரயோகம் செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த நபரை நாளை (4) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.