Header Ads

சாகல கோட்டா இடையே புரோக்கர் வேலை பார்க்கும் அந்த நபர்



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருங்கிய ஐக்கிய தேசிய கட்சியின் சக்திவாய்ந்த நபரொருவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தனது ஆதரவை தெரிவித்து தனது கட்சியுடன் இணைவதற்கு தயாராக இருப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூலம் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதுடன், அமைச்சர் சாகல ரத்நாயக்க தான் இந்தக் கதைக்கு அடிப்படை காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கமைய சாகல ரத்நாயக்க கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது சாகல ரத்நாயக்கவின் சகோதரர் காவன் ரத்நாயக்க என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காவன் ரத்நாயக்க கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியின் தரப்பில் உறவுக்காரராக இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் நடைபெற்றால், கடந்த நான்கு ஆண்டுகளாக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்தாத சமன்பாடு தீர்க்கப்படும். 

அதாவது, அப்போதைய நீதி அமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ஷவும், அப்போதைய FCID பிரதானி ரவி வைத்யாலங்கார ஆகிய இருவரும் தற்போது கோட்டபாய  ராஜபக்ஷத்திற்காக பகிரங்கமாக பிரச்சாரம் செய்துவருவதுடன், குறைப்பாடாக இருப்பது அப்போதைய சட்டம் மற்றும்  ஒழுங்கு அமைச்சராக இருந்த சாகல ரத்நாயக்க மட்டுமே. 

Powered by Blogger.