மாவீரர் நினைவேந்தலை குழப்புவதற்கு கோட்டாவினால் கிளிநொச்சிக்கு விசேட குழு
மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தலை குழப்புவதற்கு கோத்தபாயவால் கிளிநொச்சிக்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவறாஜா தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வருடம் தோறும் மக்களுடன் இணைந்து பணிக் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கி
மாவீரர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து அமைதியான முறையில் உணர்வுபூர்வமான நினை வேந்தலை செய்து வருவதனை அனைவரும் அறிந்ததே.
ஆனால் இம்முறை நினைவேந்தல்
செய்வதற்காக பூர்வாங்கப் பணிகள் பணிக் குழுக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள
நிலையில் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விலை போன சில
அடிவருடிகளைக் கொண்டு இதனை குழப்புவதற்கான ஏற்ப்பாடுகள் நடைபெற்று வருவதனை
அறிகின்றோம்.
அடி வருடிகளுக்கும்
அரசாங்கத்திற்கும் அவர்கள் புலிகள், பங்கரவாதிகள் என பல பெயர்கள்
இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவர்கள் உறவுகள், பிள்ளைகள், என்பதனை
அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு விலை போன எமது
உறவுகளை நினைக்கும் போது சங்கடமாக இருந்தாலும் அவர்களின் குழப்பகரமான
செயலுக்கு எமது மக்கள் பலிக்கடா ஆகாது இம் முறையும் சுமூகமாக அமைதியான
முறையில் வழமை போன்று நினைவேந்த வாருங்கள், குழப்ப வாதிகளுக்கு தக்க பாடம்
புகட்டுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment