Header Ads

அமைச்சர் ரிஷாத் மன்னாரில் தமிழ் மக்களை புறக்கணிக்கிறார் நாமல்



பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அனைத்து வாக்கெடுப்புக்களிலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட்டார்கள்.

ஆனால் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுடைய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கோ அல்லது உங்களுடைய நிலைகளை பற்றி யோசிப்பதற்கோ நடு நிலையானவர்களாக இருக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மன்னார் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (18) மாலை 4 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து கூட்டம் இடம் பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது,

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்று செய்து கொண்டு இருக்கின்றார்.

ஆனால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களை அவர் திரும்பி பார்ப்பதாக இல்லை. வடக்கில் இருக்கின்ற அமைச்சர் என்கின்ற வகையில் அவர் தனது கடமைகளை செய்திருக்கவில்லை. 
நாங்கள் இனவாதத்தை கதைக்க இங்கே வரவில்லை. நாம் முஸ்ஸிம் கிராமங்கள் அபிவிருத்தி அடைவதற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழ் கிராமங்களும் அபிவிருத்தி அடைய வேண்டும்.
எங்களுடைய காலத்திலும் குறித்த அமைச்சர் அவ்வாறான வேலைகளை செய்து வந்தார். ஆனாலும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் மன்னாரை வைத்திருந்தார்.
முஸ்ஸிம் கிராமங்களில் இருக்கின்ற அபிவிருத்திகள் தமிழ் கிராமங்களில் இடம் பெறவில்லை. இந்த குறைபாடுகளை வைத்தே குறிப்பிடுகின்றேன். இப்படியான நிலமைகள் மாற வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.


Powered by Blogger.