ஜேவிபி இன் அதிரடி அறிவிப்பு; பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பு
கடந்த 71 ஆண்டு காலத்தில் நாட்டில் கட்சி மற்றும் நிறம் மாறியுள்ளதே தவிற நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டீ. லால்காந்த கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நோர்வூட் பிரதேசத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் ஆணையை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகக் கூடிய உறுப்பினர்கள் மக்களுக்கு சேவையாற்றாமல் அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு மக்களை புறக்கணிக்கும் போது கூட அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள் குறைக்கப்படுவதுடன், அவர்களுக்கான ஓய்வூதியமும் நிறுத்தப்படும் என்று கே.டீ. லால்காந்த கூறியுள்ளார்.

Post a Comment