சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட 100 பேர் சஜித்துடன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மெதிரிகிரிய பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் இரண்டு முன்னாள் உறுப்பினர்கள் உட்பட சுதந்திரக் கட்சியை சேர்ந்த 100 பேர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளனர்.
இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொலன்நறுவை மாவட்டத்தின் முன்னாள் அரசியல் அமைப்பாளர் எம்.எம். டொனால்ட்டை சந்தித்து கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு முதல் மெதிரிகிரிய பிரதேச சபையில் அங்கம் வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் உபாலி கஜநாயக்க, முன்னாள் உறுப்பினர்கள் திலக் செனவிரத்ன, காமினி சரத் சந்திர உட்பட 100 பேரே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்கள்,
ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசியின் செயலாளர் உள்ளிட்டோர் மகிந்த ராஜபக்சவும் பொதுஜன பெரமுனவும் சரியில்லை எனக் கூறி வந்ததுடன் தற்போது அவர்களுக்கு ஆதரவு வழங்க சென்றுள்ளனர் எனவும் அவர்கள் கட்சியினரை மதிக்காது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டிப்பதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
Post a Comment