Header Ads

தனியார் பஸ் உரிமையாளர்கள் கோட்டாவுக்கு ஆதரவு




தமது சங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு பெற்றுக்கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் இல்லத்திற்கு தமது சங்க உறுப்பினர்களுடன் இன்று சென்று அவரை சந்தித்து இதனை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட ரீதியிலும் தனது ஆதரவை கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.