Header Ads

கம்மன்பிலவுடன் அவுஸ்திரேலியா சென்ற அலி சப்ரி



'2020 கோட்டாவுடன் இலங்கையின் எதிர்காலம்' என்ற தலைப்பில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இன்று கூட்டம் ஒன்று இடம்பெறுகிறது.

அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகின்ற இந்த நிகழ்வில் இலங்கையின் அரசியல், நீதித்துறை மற்றும் பொருளாதாரத் துறை ஆகியன சம்பந்தமாக கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளன.

மெல்பர்னில் உள்ள இலங்கையர்களால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, ஜனாதிபதி சடச்டத்தரணி அலி சப்ரி மற்றும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வௌிநாட்டிலிருக்கும் இலங்கையர்களின் முழுமையான ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Powered by Blogger.