50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை சிங்கள பௌத்த வாக்குகளை உடைக்க சர்வதேச திட்டம்
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கள பௌத்த வாக்குகளை உடைப்பதற்காக சர்வதேச சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இதற்காக வௌிநாட்டில் இருந்து பணம் மற்றும் உதவிகள் கிடைப்பதாகவும், இதில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்க உள்ள வாக்குகளில் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை சிங்கள பௌத்த வாக்குகளை உடைப்பதே திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதேநேரம் சஜித் பிரேமதாஸ தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தத்தின் மூலம் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

Post a Comment