மைத்திரி மீண்டும் பாராளுமன்றத்திற்கு; இராஜினாமா செய்பவருக்கு ஆளுநர் பதவி
ஜனாதிபதி மைத்திரிபால பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்காக தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்ய உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு இராஜினாமா செய்யும் உறுப்பினருக்கு ஆளுநர் பதவி அல்லது வேறு உயர் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் எதிர்வரும் 16ம் திகதி நிறைவடைய உள்ளதிடன் அதன் பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment