கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குணப்படுத்த முடியாத நோய்?
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குணப்படுத்த முடியாத கடுமையான நோய் ஒன்று இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்தர கூறியுள்ளார்.
அதன் காரணமாக தான் அவர் இலங்கை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறாமல் சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு செல்வதாக ஹிருணிகா கூறியுள்ளார்.
அதேநேரம் ராஜபக்ஷ 70 வயது பழமையான கிழவன் என்று கூறிய அவர், நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை இளைஞரான சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

Post a Comment