கோட்டாபயவின் சுவரொட்டிகளுடன் பிரதேச சபை உப தலைவர் கைது
தேர்தல் பிரசாரத்திற்காக அரச சொத்தை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வலல்லாவிட்ட பிரதேச சபையின் உப தலைவர் உட்பட மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிபென்ன பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேச சபைக்கு சொந்தமான கெப் வண்டியில் கோத்தபாய ராஜபக்சவின் ஜனாதிபதித் தேர்தல் சுவரொட்டிகள் எடுத்துச் சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
கெப் வண்டியின் ஊடாக தேர்தல் சுவரொட்டிகள் பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
கைது செய்யப்படும் போது, 272 சுவரொட்டிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி மத்துகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment