Header Ads

சந்திரிகா நாடு திரும்பினார்; மைத்திரி ஜப்பான் பறக்கிறார் - வந்தவுடன் விஷேட அறிவிப்பு



ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று ஜப்பானுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சுமார் ஒரு வார காலம் ஜப்பானில் தங்கியிருக்கும் மைத்ரி, தாம் நாடு திரும்பும்வரை கட்சித் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பை தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் லக்ஷ்மன் பியதாசவிடம் வழங்கியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் குறித்து பேச சந்திரிகா அனுமதி கோரியிருந்த நிலையில் மைத்ரி இவ்வாறு ஜப்பான் புறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடு திரும்பிய கையோடு பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட தயாராகும் மைத்ரி- அமைச்சர்கள் பலர் செய்த ஊழல் மோசடிகள் குறித்து பகிரங்க அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளாரென அறியமுடிந்தது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று இரவு லண்டனில் இருந்து இலங்கையை வந்தடைந்ததாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Powered by Blogger.