Header Ads

சஜித்தின் பிரச்சார கூட்டங்களை ரணில் புறக்கனிக்க தீர்மானம்?

 


ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக நேற்று மாத்தளை – லக்கலையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் பேசும்போது , சஜித் ஆதரவாளர்கள் சிலர் ஊளையிட்டு செய்த குழப்பம் தொடர்பில் கட்சிக்குள் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய இந்த சம்பவத்திற்கு தனியார் ஊடகங்கள் முக்கிய இடத்தை வழங்கியிருந்தன. மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் சஜித் கூட்டத்திற்கு வரக் கூடாதென நேற்று குழப்பம் விளைவித்தவர்கள் கூறியிருந்தனர்.

முன்னதாக பிரதமர் ரணில் தேர்தல் மேடைகளில் பேசுவதை வரையறுத்திருந்த சஜித் தரப்பு, இப்போது அவரை பகிரங்கமாகவே எதிர்க்க முனைந்திருப்பது குறித்து நேற்றைய சம்பவத்துடன் அதிருப்தியடைந்த ரணில் – நேற்றிரவே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரை தொலைபேசியில் அழைத்து விசனம் வெளியிட்டுள்ளார்.

“ நான் தேர்தல் மேடைகளில் பேச வருவதை விரும்பாவிட்டால் பரவாயில்லை. பின்னர் வரும் முடிவுகளுக்கு என்னை குறை சொல்ல வேண்டாம் ..” என்று ரணில் இதன்போது கூறியதாக தெரிகிறது .

இதேவேளை நேற்றைய குழப்ப நிகழ்விற்கும் தங்களுக்கும் தொடர்பில்லையென சஜித் தரப்பு பிரதமரிடம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிந்தது.
Powered by Blogger.