Header Ads

முல்லைத்தீவில் பாரிய அளவில் நில அபகரிப்பு; கொந்தளித்த மக்கள் (படங்களுடன்)




முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இருட்டு மடு பகுதியில் சட்டத்திற்கு முரணாண வகையில் இருபது ஏக்கர் காட்டினை அழித்து காணியினை பிடித்து உழவு செய்ய முற்றபட்ட போது இருட்டு மடு மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களை அழைத்த பிரதேச மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இருட்டு மடு இரண்டாம் ஒழுங்கை வீதி மற்றும் மூங்கிலாற்று பகுதியில் உள்ள காட்டுப்பகுதி 2017 ஆம் ஆண்டு கனரக வாகனங்கள் கொண்டு அழிக்கப்படுவதாக மக்கள் முறையிட்டதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்கள்.

இந்த விடயம் தொடர்பில் அன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் காணி அதிகாரியிடம் இந்த காணி தொடர்பில் ஏதாவது ஆவணங்கள் இருக்கின்றனவா எல்லைகளை பார்வையிட்டுள்ளனவா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் அவர்கள் கேட்டுள்ளார். இதற்கு ஆவணம் எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.




அன்று புதுக்குடியிருப்பின் பிரதேச செயலக செயலாளராக ம.பிரதீபன் அவர்கள் இருந்துள்ளார். அவரிடம் மக்கள் இந்த காணிப்பிரச்சனையினை தீர்த்துகொடுங்கள் இருட்டு மடுவினை சேர்ந்த பல குடும்பங்கள் வயல்காணி இல்லாத நிலையில் வாழ்ந்துவருகின்றார்கள். அவர்களுக்கு இந்த காணியினை பங்கிட்டு கொடுங்கள் என்று பல தடவைகள் கோரியும் பிரதேச செயலாளர் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது 15.10.19 அன்று இந்த காணிக்கு உரிமையாளர்கள் இருப்பதாகவும் அவர்கள் காணியினை துப்பரவு செய்ய அனுமதி இருப்பதாக பிரதேச செயலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த பொது காணி விடயத்தில் பிரதேச செயலகமும், காணிப்பகுதியினரும், வனவளத் திணைக்களத்தினரும் இணைந்து வேலை செய்துள்ளார்கள். இதில் ஒரு தவறு இருக்கின்றது இந்த காணிகள் புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செய்கை பண்ணப்பட்ட காணி என அதிகாரிகளால் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காணியினை பிடிப்பபதற்காக ஆற்றினை மூடியுள்ளார்கள் பெரும் மரத்தினை அழித்துள்ளார்கள் இவை அனைத்தினையும் வனவளத்திணைக்களத்தினர் பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். ஆனால் அந்த பிரதேசத்தினை சேர்ந்த மக்கள் காட்டில் ஒரு தடி வெட்டமுடியாத நிலையில் வாழ்கின்றார்கள்.

பணத்தினை வைத்து அரச அதிகாரிகளை விலைக்குவாங்கும் செயற்பாடே இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என பிரதேச மக்கள் கவலை தெரவித்துள்ளார்கள்.





இந்த காணி விடயம் தொடர்பில் அண்மையில் பிரதேச சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்களை அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.

குறித்த காணியின் உரிமையாளர்களிடம் பத்திரங்கள் உள்ளன உதவி அரசாங்க அதிபர் கையெழுத்துவைத்துள்ளார் இவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் வழங்கக்கூடாது அதனை மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தியுள்ளார்கள். அதனைவிட பொலிஸார் சொல்கின்றார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சொல்லியுள்ளார் புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட காணிஅது என்று சொல்லியுள்ளளார் இந்த விடையத்தில் தலையிடுபவர்களை கைது செய்வோம் என்று பொலிஸார் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.

இந்த காணி அபகரிக்கும் போது காணிகச்சேரி அதிகாரிகள் 2017 ஆம் ஆண்டு வந்துள்ளார்கள் அப்போது காணியினை பார்வையிட்டு இந்த காணிக்கு எந்தவிதமான அனுமதியும் கொடுக்கவில்லை என்று சொல்லியுள்ளார்கள் அதன் உறுதிப்படுத்தல் கடிதமும் கமக்கார அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

இருட்டு மடுவில் உள்ள காணித்திட்டங்கள் அனைத்தும் இரண்டு ஏக்கர் திட்டக்காணிகள் தற்போது அவைகள் எல்லாம் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்து அரை ஏக்கராக மாறியுள்ளது. ஆனால் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவருக்கு மாத்திரம் ஜந்து ஏக்கர் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்கின்றார்கள் இது எவ்வாறு வந்தது பணத்தினால் வந்ததா என பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

தனி நபர்களுக்காக அரசியல் வாதிகள் பக்கசார்பாக செயற்பட்டு வருகின்றார்கள் இரண்டு பேருக்கு இருபது ஏக்கர் காணியா என்ன நியாயம்.




குறித்த இருட்டு மடு காணி தொடர்பில் இருட்டு மடுவினைன சேர்ந்த கமக்கார அமைப்பின் உறுப்பினர்களை அழைத்த பிரதேச செயலக அதிகாரிகள் காணி கச்சேரியினை நடத்தினார்கள். அதில் எங்களிடம் ஒன்றினை கேட்டார்கள் இந்த காணிப் பிரச்சனையினை இப்படியே விடுங்கள் உங்களுக்கு வேணும் என்றால் இரண்டு ஏக்கர் காணியினை தல்லாம் என்று பேரம் பேசினார்கள் அவர்களின் கதையினை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு நியாயமான தீர்வு வேண்டும் என்று சொல்லிவிட்டு கமக்கார அமைப்பினர் திரும்பியுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது முல்லைத்தீவு மண்ணில் நடந்தேறிக்கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்புக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தவசீலன்
Powered by Blogger.