Header Ads

ட்ரம்பின் தலையில் ஏறி மிதிக்கும் பெண்; சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள படம்



அமெரிக்காவிலுள்ள துணி விற்பனை நிறுவனமொன்றின் விளம்பர பலகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனல்ட் டிரம்பை பெண் ஒருவர் மிதிப்பது போன்ற புகைப்படம் காட்சிக்கு வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் துணி விற்பனை நிறுவனம் ஒன்று தனது கடை முன்பு விளம்பர பலகை வைத்துள்ளது.  அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவத்தினையொத்த ஒருவரை தரையில் கிடத்தி, தடகள போட்டிக்கான உடை அணிந்த பெண் ஒருவர் அவரது முகத்தின் மீது காலால் மிதித்தபடி உள்ளார்.

பின்பு மற்றொரு கையில் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற கயிறுகளால் அவரை கட்டி போட்டபடியும் உள்ளார்.

இந்த விளம்பர பலகை வைக்கப்பட்டு இருப்பது பற்றி அந்நாட்டின் ஊடகத்தை  டிரம்பின் மகனான ஜூனியர் டிரம்ப் சாடியுள்ளார்.  இதுபற்றிய அவருடைய டுவிட்டர் பதிவில், நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிரபல ஊடகங்களே.  உங்களுக்கு முட்டாள்தன மற்றும் சுவாரசியமில்லாத விளம்பரங்களை வெளியிடுவதற்கா நேரமுள்ளது.

டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டு உள்ள இந்த விளம்பர பலகை பற்றிய செய்தியை ஊடகங்களில் வெளியிடுவதற்கும் நேரம் ஒதுக்கும்படி உங்களிடம் கூறி கொள்கிறேன்.

அப்படி இல்லையெனில் நீங்கள் அனைவரும் வீணர்களே என ஆவேசமுடன் தெரிவித்து உள்ளார். இந்த பலகையில் இடம் பெற்று உள்ள பெண் விளம்பரங்களில் தோன்றும் மிச்சல் மெசா என்றும் அவர் பள்ளிக்கூடமொன்றின் ஆசிரியர் என்றும் கூறப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Powered by Blogger.