போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பதாக கூறும் கோட்டா

தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக குழுக்களை இல்லாதொழிப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார்.
இன்று வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரின் அபிமானத்தை இல்லாமல் செய்து, புலனாய்வு பிரிவை பலவீனப்படுத்தி தேவாலயங்களுக்கு குண்டு வைக்கும் பாதுகாப்பற்ற நிலையை நாட்டினுள் ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது நாட்டின் சுபீட்சத்திற்காக தௌிவான வேலைத் திட்டம் ஒன்று தன்னால் வரையப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
Post a Comment