Header Ads

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக வழக்கு?



70 கோடி ரூபா அரச நிதியை தவறாக தவறாக பயன்படுத்தியுள்ளதாக சஜித் பிரேமதாஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.


அதன்படி அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு, அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் மோசடிகளை விசாரிக்க நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

திட்டக் கோட்டேயில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச இதனைக் கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் அமைச்சின் கீழ் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு 1117 பேரை சட்டவிரோதமாக இணைத்துக்கொண்டு அவர்களுக்கு ஊழியம் வழங்கியதன் ஊடாக இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதுடன் அதன்படி சஜித் பிரேமதாசவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.


Powered by Blogger.