Header Ads

பரபரப்புக்கு மத்தியில் மைத்திரியை சந்திக்க உள்ள சஜித்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உட்பட்ட குழுவினருக்குமிடையில் இன்று மாலை முக்கியமான சந்திப்பொன்று நடக்கவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் நடந்த அரசியல் கூட்டணி பேச்சு இழுபறியான நிலையில் இருப்பதால் இன்று நடக்கும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததென தெரிகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடியாதெனவும் பொது சின்னமொன்றின் கீழ் போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியுமெனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னதாக அறிவித்து அதனை நேற்றைய மத்திய குழுவில் முடிவெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.