Header Ads

ஜனாதிபதி மைத்திரி தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏறாததற்கு காரணம் இதுதான்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரினதும் பிரச்சார மேடைகளில் ஏறமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக மாநாட்டில் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌிநாடு சென்றிருந்த காலப்பகுதியில் இரு தரணப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதிலும் அவரை சேர்த்துக் கொள்ள இரு தரப்பினரும் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அடிமட்ட கட்சிக்காரர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாகவே அவரை சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் மேடையேறும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு கூட்டங்களின் போது ஹூ சத்தமிடப்படுவதால் அது ஜனாதிபதிக்கும் நேரலாம் என்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறயினும் இறுதி தருணத்தில் யாராவது ஒருவேட்பாளரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



Powered by Blogger.