பத்தரமுல்லையில் ஆடை விற்பனையகத்தில் பாரிய தீ
கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.
இந்த தீ விபத்து நேற்றிரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆடை மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலைத்தில் பரவிய தீயினால், குறித்த வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டே மாநகர சபைக்கு சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்றிரவு பரவிய தீயை, தீயணைப்பு பிரிவினர் இன்று அதிகாலை 5 மணிக்கே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், பத்தரமுல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment