தோட்ட தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தை தடுத்து நிறுத்திவிட்டார்கள்
நாட்டில் இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 30 கோடி ருபாய் பணமும் மூன்று சீட்டும் வழங்கியிருந்தால், தமிழ் மக்களை கோத்தபாய ராஜபக்ஷ தான் கொன்றதாக சிலர் கூறியிருப்பார்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட
உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தில் (19.10.2019) சனிகிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அமைச்சர் உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. சிறிதரன், எம். உதயகுமார், எம். ராம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம்,
மலையகத்தில் உள்ள தலைவர் ஒருவர் கூறுகிறார், மலையகத்தில் வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு கிராமங்கள் அமைக்க அவர் நினைத்திருந்ததாக. அதன் அனைத்தையும் நான் இல்லாமல் செய்ததாக கூறுகிறார்.
நாங்கள் வந்த பிறகுதான் மலையக மக்களுக்கு தனி வீட்டுத்திட்டம், காணி உறுதிப்பத்திரம், அதிகாரசபை, பிரதேச சபை அதிகரித்தல் என்பன பெற்று
கொடுத்துள்ளோம்.
இவ்வளவு நாளாக இவர்கள் தூங்கி கொண்டு இருந்து விட்டு இன்று
பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வருகிறார்கள்.
நான் தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ஐந்தாயிரம் ருபா கேட்டிருந்தேன். அதற்கு ஆதரவு வழங்குவதாக கூறிவிட்டு தேர்தல் ஆணையாளரிடம் சென்று முறைப்பாடு செய்து அதனை இல்லாமல் செய்துவிட்டார்கள் என்று அவர் கூறினார்.
சதீஷ்குமார்

Post a Comment