கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தினேஷ் குண்வர்தனவின் மெளனம்?
பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் மேடைகளில் ஏறாமல் திடீர் மெளனம் காத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலை கொழும்பு அரசியல் அரங்கில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினேஷ்குணவர்தனவின் தொகுதியான மகரகமவில் நடைபெற்ற கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் கூட்டத்திலும் அவர் பங்குபெறாததால் இது அடுத்த அரசியல் பல்டிக்கான காத்திருப்பாய் இருக்கக் கூடும் என்று அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்து இருக்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மகிந்த ராஜபக்ஷ தரப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment