குமார வெல்கமவின் வீட்டில் கொள்ளையர்கள்
அளுத்கம களுமோதர பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் அறையின் ஜன்னலை உடைத்து, அறைக்குள் நுழைந்து பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் ஜன்னலை உடைக்க பயன்படுத்திய இரும்பு ஆயுதத்தை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வீட்டில் இருக்கவில்லை. சம்பவம் குறித்து அளுத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குமார வெல்கமவின் வீடு களுவாமோதர ஆற்றுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. ஆற்றுக்கு அருகில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் ஆற்றோரமாக வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொள்ளையிட வந்தவர்கள் குமார வெல்கமவின் உயிருக்கு சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்துள்ளார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Post a Comment