வாளை எடுக்க காத்திருக்கும் மைத்திரி; நவம்பர் முதல் கதாநாயகன் மைத்திரிதான்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை அவர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முற்றிலும் செயலற்ற நிலையில் உள்ளார்.
இருப்பினும் இந்த நிலைமை தொடராது என்றும்,
எதிர்வரும் இரண்டு வாரங்களில் அவர் ஆதரிக்கும் குறிப்பிட்ட வேட்பாளர்
சார்பில் ஜனாதிபதி பல தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் அரசியல்
வட்டாரங்கள் கூறுகின்றன.
மைத்ரிபால சிறிசேன மக்கள் வியப்புக்கு பெயர் பெற்றவர். இதற்கமைய
ஜனாதிபதியாக அவரின் இறுதி சப்ரைஸ் சிலவற்றை அவரின் பதவிக்காலம் நிறைவடைய
உள்ள இறுதி இரண்டு வாரங்களில் காணக்கூடியதாக இருக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறியது போல,
இந்த நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவை குறைத்து மதிப்பிடுவது அரசியல்
தவறாகும். அவர் நவம்பர் 17ம் திகதி வரை நாட்டின் நிர்வாக
ஜனாதிபதியாவதுடன், இரு முக்கிய கட்சிகளின் ரகசியங்களையும் நன்கு
அறிந்தவராவார்.
கடைசி நிமிடத்தில் அவர் விரும்பும்
வேட்பாளரை ஊக்குவிப்பதை விடவும், அவர் விரும்பாத வேட்பாளரின் உருவத்தை
முற்றிலுமாக அழிப்பதற்கான பல விடயங்களை மேற்கொள்ள அவரிடம் ஆயுதம்
உள்ளது.
இருப்பினும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பாதநிலையில்
அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் விரும்பவில்லை. அவர் நிர்வாக ஜனாதிபதி
பதவியில் இருந்து நீங்கி அவர் ஒரு சிறிய பதவியில் திருப்தி அடைவார் என்று
கருதுவதும் ஒரு கடுமையான தவறு.
எனவே, நவம்பர் முதல் வாரத்தில் இருந்து,
ஜனாதிபதியின் நடத்தை மிகவும் முக்கியமானதாக இருக்கும், மேலும் ஜனாதிபதியின்
முழு ஆதரவையும் பெறக்கூடிய வேட்பாளர் தனது வெற்றியைப் பெறுவார்.
நாங்கள் இதை சில காலமாக சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில் மேலும் பல விடயங்களை எதிர்பாருங்கள்.

Post a Comment