ரணில் விக்ரமசிங்க பிரதமர் மற்றும் கட்சித் தலைவர் பதவிகளில் இருந்து விலக தீர்மானம்?
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவி
மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சஜீத் பிரேமதாஸ வெற்றி பெற்றால் அவருக்கு தேவையானது போல் புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கும், கட்சியின் செயற்பாட்டு நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுப்பதற்கும் ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால் அவருக்கு முழுமையான பொறுப்பையும் வழங்கிவிட்டு தான் ஓய்வெடுக்கப் போவதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது சஜித் தரப்பால் சொல்லப்படுகின்ற பொய்ப் பிரச்சாரம் என்றும் ரணிலுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment