Header Ads

அச்சுறுத்தல் விடுத்த பிரபல அரசியல்வாதி; FCID யின் முன்னாள் பிரதானி வௌியிட்ட அதிரடி கருத்துக்கள்



அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் தலைமையகத்தின் குற்றவியல் பிரிவு எதிர்பார்க்கப்பட்ட வகையில் சுயாதீனமாக செயற்படவில்லை என அந்த பிரிவுக்கு பொறுப்பாக
இருந்த முன்னாள் பிரதானி சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்கார நேற்று (25) சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றை வெளிபடுத்தியுள்ளார்.

அந்த பிரிவின் ஊடாக கடந்த அரசாங்கத்தின் ஒரு  தரப்பினரை இலக்கு வைத்து மாத்திரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்கார,

கேள்வி: நீங்கள் FCID  இல் எவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்தீர்கள்?

ரவி வைத்தியலங்கார : 300 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 50 முறைப்பாடுகள்
தொடர்பில் விசாரணைகளை நிறைவு செய்திருந்தோம். தற்போது 15 வழக்குகள் மாத்திரமே நிலுவையில் உள்ளன.


கேள்வி: FCID ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா?

ரவி வைத்தியலங்கார : FCID யின் நடவடிக்கைகளை இதனைவிட சுயாதீனமாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்னும் பல விடயங்களை
சாதித்திருக்க முடியும்.

கேள்வி: அரசியல் தலையீடுகளால் அதனை திறம்பட முன்னெடுக்க முடியவில்லை என்பதா? உங்களின் கருத்து.

ரவி வைத்தியலங்கார : உண்மையாக அரசியல் தலையீடுகள் இருந்தன. FCID பிரிவு ஊழல் மோசடிகள் குறித்தே விவாரணை நடத்தியது.
அதனை தவிர வேறு விசாரணைகளை எம்மால் முன்னெடுக்க முடியாதிருந்தது. அனைத்து முறைப்பாடுகளும் முன்பு இருந்த அரசாங்கம்
சம்பந்தப்பட்டவை. அதற்கமைய ஒரு பிரிவை மாத்திரம் இலக்கு வைத்து விசாரணைகள் இடம்பெற்றன.


கேள்வி: அதாவது கூடுதலான முறைப்பாடுகள் ராஜபக்ஸாக்கள் எதிராகவா பதிவாகின?


ரவி வைத்தியலங்கார : ஆம் கடுமையான முறைப்பாடுகள் ராஜபக்ஸாக்கலுக்கு எதிராக சுமத்தப்பட்டன.


கேள்வி: அதாவது ஊழல், மோசடி பிரிவில் முன்னாள் அமைச்சர்களின் தலையீடு இருந்தது என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?

ரவி வைத்தியலங்கார : அதாவது முறைப்பாடுகள் தொடர்பில் விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு கூறியது உண்மை.

கேள்வி: இவற்றை செய்யுமாறு யார் உங்களுக்கு ஆலோசனை வழங்கியது?

ரவி வைத்தியலங்கார : இந்த பிரிவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன செயற்பட்டார். அப்போது முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதே அவர்களின் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

கேள்வி: FCID யின் பிரதானி என்றவகையில் உங்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்பட்டதா?

ரவி வைத்தியலங்கார : ஆம் அவ்வாறான அச்சுறுத்தல் வந்தது. ஆனாலும் நான் சட்டத்திற்கு அமையவே செயற்பட்டேன்.

கேள்வி: உங்கள் குழுவில் முன்பிருந்த அங்கங்தவர்கள் யாவர்?

ரவி வைத்தியலங்கார : அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அமைச்சர் சரத் பொன்சேக்கா, அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும்
அமைச்சர் மலீக் சமரவிக்ரம ஆகியோர் இருந்தனர்.

கேள்வி: அந்த குழுவில் அநுரகுமார திசாநாயக்க இருந்தாரா?

ரவி வைத்தியலங்கார : ஆம் அவர் குழுவின் உறுப்பினரா என என்கு தெரியாது. ஆனால் அவர் பங்குபற்றினார். விசாரணைகள் குறித்த மிகுந்த ஆர்வமுடைய பலரே இந்த குழுவில் அங்கம் வகித்தனர்.

கேள்வி: உங்களை அந்த பதவிக்கு நியமித்தவுடன், லசந்த விக்ரமதுங்கவின் மகள் உங்களை ஊழல்வாதி என குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தாரே?

ரவி வைத்தியலங்கார : அதாவது லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு காரணமான விடயங்களை தி சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ஸக்கு எதிரான மிக் ரக விமான கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகளை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மிக் ரக விமான கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் FCID விசாரணைகளை நடத்தியது. ஆகவே கோட்டாபய ராஜபக்ஸ இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என கூற முனைத்தனர்.

ஆனால் சாட்சி இல்லாமல் ஒருவரை குற்றவாளி என்றோ சந்தேகநபர்
என்றோ கூற முடியாது. எனவே அவர்கள் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள என்னை பயன்படுத்த முற்பட்டனர் ஆனால் நான் அதற்கு இடமளிக்கவில்லை.

கேள்வி: கோட்டாபய ராஜபக்ஸ மிக் ரக விமான கொள்வனவில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டாரா?


ரவி வைத்தியலங்கார : நான் அங்கு இருந்த காலம் வரை அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதனுடன்
தொடர்ப்புபட்டிருந்தமைக்கான எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

Powered by Blogger.