Header Ads

இணையத்தில் விளம்பரம்; நடமாடும் விபச்சார தொழில் - தாய்லாந்து யுவதி கைது




வெள்ளவத்தை சில்வா மாவத்தையில் இணையத்தின் மூலம் விளம்பரம் செய்து மோட்டார் சைக்கிள் ஒன்றை பயன்படுத்தி நடத்தப்பட்ட
நடமாடும் விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று அதிகாலை 12.10 அளவில் முன்னேடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சார நடவடிக்கையை முன்னெடுக்க முகாமைத்துவம் செய்த ஒருவரும், விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து பெண் ஒருவரையும் வெள்வத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 34 வயதுகளை உடையவர்கள் எனவும், கைதான ஆண் நுகேகொடை பகுதியில் வசசிப்பவர் எனவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை இன்று கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கும்
வெள்ளவத்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.



Powered by Blogger.