Header Ads

கடுமையான நிதி நெருக்கடியில் சஜித் மற்றும் கோட்டா - தொழிலதிபர்களும் சிக்கலில்



இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகியுள்ள பிரதான முக்கிய இரு வேட்பாளர்களான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோரின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைளுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நிதியை அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சேகரிக்க முடியாமல் போனதே இதற்கு முக்கிய காரணம்.

மேலும் இரு கட்சிகளும் பணம் திரட்டியவர்கள் அந்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை சுரண்டிவிட்டதாகவும், UNPயில் அதிக பணத்தொகை இவ்வாறு சுரண்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் பிரச்சாரங்களுக்காக தங்கள் பணத்தை செலவழிக்கும் பல முன்னணி தொழிலதிபர்கள் இரு கட்சிகளுக்கும் இந்த முறை நிதி சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினரும் முதல் சுற்றில் உடனடி பிரச்சாரத்திற்காக பணத்தை செலவழிப்பதும் ஒரு பிரச்சினையாகும். ஆகஸ்ட் 11 ஆம் திகதி  தொடங்கிய பிரச்சாரத்திற்காக மொட்டு பெரும் தொகையை செலுத்தியிருந்தாலும், அது அதிக பலனைத் தரவில்லை. 

கடந்த இரண்டு வாரங்களாக யு.என்.பி சிக்கலில் உள்ளது, செய்தித்தாள் மற்றும் இணைய விளம்பரங்களுக்கு பெரும் தொகையை செலவிடுகிறது.

இதற்கிடையில் சாதாரணமாக இலங்கையில் எந்தவொரு பிரதான தேர்தலுக்காக அதிகமான நிதி தலையீடுகளை மேற்கொள்ளும் சீனா மற்றும் இந்தியா (எந்தக் கட்சியும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை) ஆகிய நாடுகள் இம்முறை இறுதி தருணம் வரை யோசனை செய்யும் நிலை காணப்படுவதாகவும், இதுவும் இரு கட்சிகளின் நிதி நெருக்கடிக்கு ஒரு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Powered by Blogger.