Header Ads

ராஜீவ் காந்தி கொலை; 07 தமிழர்களையும் விடுவிப்பதற்கு எதிராக தமிழக ஆளுநர்

தமிழ்க ஆளுநர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிராக இருப்பதாக தி ஹிந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் தமிழக அமைச்சரவையின் நிலைப்பாட்டை அவர் நிராகரித்துள்ளார்.

ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தெரிவித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை என்று அதிகாரபூர்வமற்ற வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தன்னுடைய முடிவு குறித்து அரசுக்கு அவர் எழுத்துபூர்வமாக எதையும் இன்னும் வழங்கவில்லை என்று தி ஹிந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

Powered by Blogger.