கோட்டா தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும், இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் சிறந்த தலைவர்
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் சிறந்த தலைவராக கோட்டாபய ராஜபக்ஷவைக் கண்டு கொண்டோம். எனவே, சிறுபான்மை இன சமூகத்தின் துணையுடன் அவரது வெற்றிக்காகப் பாடுபடப் புறப்பட்டுவிட்டோம் என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா கொழும்பில் இன்று தெரிவித்தார்.
ஸ்ரீல.சு.க. தலைமையகத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,
இந்நாட்டு மக்கள், மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வினாவுக்கு இன்று
விடை அளித்து விட்டோம். பொதுஜன பெரமுனவுக்கு எமது ஆதரவு கிடைத்தமையால்,
கோத்தாபய ராஜபக்ஷ் வெற்றி பெற்றுவிட்டார்.
எமக்கு இன்று தேசிய பாதுகாப்பு அவசியம். இதுதான் இன்றைய எமது எதிர்பார்ப்பாகும்.
எனவேதான், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வேட்பாளர் யார்...?, இன
நல்லுறவைக் கட்டியெழுப்பும் தலைவர் யார்...? என்ற நிலைப்பாட்டில் இருப்பவர் கோட்டாபயதான் என்பதனைப் புரிந்து கொண்டோம்.
அதனால், கோட்டாபய
ராஜபக்ஷவுக்கு எமது முழு அளவிலான ஆதரவினையும் வழங்குவதற்குத்
தீர்மானித்திருக்கின்றோம்.

Post a Comment