Header Ads

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகினாரா?


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்ட சூடான வாத விவாதங்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ.ல.சு.கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்ற இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை அக்கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்த நிலையில், கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியை புறக்கணித்து விட்டு மொட்டு கட்சியில் இணைவதற்கு ஆயத்தமாக இருந்ததை அறிந்து கொண்டதைத் தொடர்ந்தே  ஜனாதிபதி இத்தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து இன்னும் விலகவில்லை என ஜனாதிபதி மகன் தஹாம் சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.