Header Ads

சஜித் பக்கம் தாவும் மூவர் - சஜித்துக்காக புரோக்கர் வேலை பார்க்கும் சந்திரிகா



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான அமைச்சர் ஒருவர் தீர்மானித்துள்ளார்.

பிரதமர் ரணிலுக்கு நெருக்கமான – தென்மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைச்சரை பெரமுனவுக்குள் உள்வாங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும் அவற்றை சமாளிக்கும் முயற்சியில் மஹிந்த தரப்பு ஈடுபட்டு வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்மாரை உள்வாங்குவதால் அது அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துமென மஹிந்த தரப்பு எம் பிக்கள் எதிர்ப்பு வெளியிடுவதாக தெரிகிறது.
 
இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மூவரை தன்பக்கம் வளைத்துப் போட சஜித் தரப்பும் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஊடாக இந்த பேச்சுக்கள் நடக்கின்றன.

கடந்த சனிக்கிழமை நாடு திரும்பவிருந்த சந்திரிகா இவ்வார இறுதியில் நாடு திரும்பவுள்ளார்.அதன் பின்னர் அவர் சஜித் தரப்புக்கு ஆதரவளிக்கும் அரசியல் பிரமுகர்களை ஒன்றிணைப்பாரென சொல்லப்பட்டது.
Powered by Blogger.