அதியவசியப் பொருட்களின் விலைகள் குறைகின்றன

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் அறிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது 450 – 500 ரூபாவிற்குள்ள செத்தல் மிளகாயின் விலையை குறைப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாய் ஒரு கிலோவுக்கான வரி 25 ரூபாவில் இருந்து 5 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் மீன் ஒரு கிலோவுக்கான வரி 100 ரூபாவில் இருந்து 25 ரூபாவாக குறைப்பதற்கு வாழ்க்கை செலவுக்கான குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்க களஞ்சியசாலையில் உள்ள 48,000 மெட்ரிக் தொன் நெல்லை சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் உதவியுடன் அரிசியாக மாற்றி சதொச ஊடாக, நாட்டரிசியை ஒரு கிலோ 80.00 ரூபாவிற்கும் சம்பா அரிசி ஒரு கிலோ 85.00 ரூபாவிற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கோழி மற்றும் முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்காக அவற்றை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment