Header Ads

ராஜிதவின் சுகாதார அமைச்சில் வேலை தருவதாக கூறி மோசடி



வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தொடர்பாக 6 முறைப்பாடுகள் மதுகம பொலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாக கூறியே குறித்த நபர் பலரிடம் 386,500 ரூபா பண மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பதுரெலிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மதுகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.