Header Ads

இலங்கையில் பெற்றோல் விலை குறைக்கப்பட்டது


எரிப்பொருள் சூத்திரத்திற்கு அமைய, எரிப்பொருள் விலையில் சிபேட்கோ நிறுவனம் எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை.
எனினும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இரண்டு வகையான பெற்றோலின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் குறைத்துள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் எக்ஸ்ரோ பிரிமியம் யூரோ 3 ரக பெற்றோல் ஆகியவற்றின் விலைகளை இரண்டு ரூபாவினால் குறைக்க லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 142 ரூபாவாகவும், எக்ஸ்ரோ பிரிமியம் யூரோ 3 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 148 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், டீசல் விலைகளில் எந்தவித மாற்றமும் முன்னெடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.