Header Ads

உங்கள் வெற்றிக்கு பாடுபட்ட எனக்கு கைமாறாக என்ன செய்வீர்கள்? பதிலின்றி தடுமாறிய மைத்திரி

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக சஜித் பிரேமதாச தரப்பினர் இந்த சந்திப்பை நடத்தியிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை தனக்கு வழங்குமாறு சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க காரணமாக தான் ஆதரவு வழங்க போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, உங்களை ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவதற்கு தான் உட்படட ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பாடுபட்டதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகவே அதற்கு கைமாறாக தனது வெற்றிக்காக நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று தடுமாற்றம் அடைந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை தான் தனித்து எடுக்க முடியாது என்றும், கட்சியின் மத்திய செயற்குழு மூலமே இந்த தீர்மானத்தை எடுக்க முடியும் என்றும் பதில் அளித்ததாக சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான ஒருவர் சிலோன் நேசன் செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.