Header Ads

35 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு


ஜனாதிபதித் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 35 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கையானது இன்று காலை 9.00 மணி முதல் 11.00 வரையான காலப் பகுதியில் ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

இதன்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் மற்றும் வேறு கட்சிகள் சார்பில் மொத்தமாக கட்டுப் பணம் செலுத்தப்பட்ட 41 ஜனாதிபதி வேட்பாளர்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திசாநாயக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் மாத்திரம் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

No comments

Powered by Blogger.