Header Ads

சுமந்திரனுடன் தொலைபேசியில் உரையாடிய கோட்டாபய ராஜபக்ஷ; என்ன பேசினார்?

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னூ­டாக தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்­று­­க்கொள்­வதில் பொது­ஜன பெர­மு­ன­வினர் கடும் முயற்சிகளை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­, ஜனா­தி­பதி வேட்­பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இரு­வ­ருமே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் எம்.எ.சுமந்திரனுடன் தனித்­த­னியே பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்னெடுத்துள்னர்.

இந்­நி­லையில் மஹிந்த, கோட்டா­பாய , பசில் ராஜபக்ஷவினர் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின்  தலைவர் இரா.சம்­பந்­தனை சந்­தித்து பேசுவதற்கும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­தி­ர­னுடன் நேற்று முன்தினம் தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட கோட்டாபய ராஜ­பக்ஷ கூட்டமைப்பின் தலை­வர்­களை சந்­தித்து பேசு­வ­தற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூட்­ட­மைப்பின் பேச்­ச­சாளர் சுமந்­தி­ர­னிடம் வின­வி­ய­போது அவர் தெரி­வித்­த­தா­வது,

கோட்டாபய  ராஜபக்ஷ எனக்கு தொலை­பேசி மூல­மாக அழைப்பு விடுத்து பேச்சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்க முடி­யுமா என கேட்டார்.

"தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்க விருப்பம் தெரி­வித்­த­தாக எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்­னிடம் தெரிவித்தார்.

அதற்­க­மை­யவே நான் உங்­களை தொடர்­பு­கொண்டேன். எப்­போது நாம் பேசலாம்" என கோட்டா­பய ராஜபக்ஷ என்­னிடம் கேட்டார்.

எனினும் கடந்த வாரம் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்னை தனிப்­பட்ட முறையில் சந்­தித்து சில விட­யங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இதில் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆதரவை எமக்கு பெற்­று­கொ­டுக்க முடி­யுமா என்ற கோரிக்­கையை என்­னிடம் முன்­வைத்தார்.

எனினும் ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு என்ன என்­பதை நான் அவ­ருக்கு எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தேன் என்றார்.

No comments

Powered by Blogger.